.ஹபுகஸ்தலாவை அரபுக் கல்லூரி விவகாரம் : 3 மாணவர்கள் கைது..
ஹபுகஸ்தலாவ –ஹாமிதியா அரபுக் கல்லூரியின் மின்சார மீற்றர், நீர்த்தாங்கி மற்றும் காபட் எரியூட்டிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூன்று கல்லூரி மாணவர்களை நாவலப்பிட்டிய பொலிஸார் நேற்று எல்பொட சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.பொலிஸார் நடத்திய விசாரணைகளும் வாக்கு மூல அறிக்கைகளும் நேற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாததால் நீதிவான் மூன்று சந்தேக நபர்களான மாணவர்களையும் கம்பளை சிறுவர் நன்நடத்தை சீர்திருத்த நிலையத்தில் ஒப்படைக்கும்படியும் எதிர்வரும் 25 ஆம் திகதி நாவலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் அவர்களை ஆஜர்படுத்தும்படியும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவுக்கிணங்க 12 வயதுக்கும் 13 வயதுக்கும் உட்பட்ட மூன்று மாணவர்களும் கம்பளை சிறுவர் நன்நடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்...
.

Comments
Post a Comment