ஒடிசாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு : 36 பேர் படுகாயம்
(இந்திய செய்தியாளர்)
ஒடிசாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.hiஉயிரிழந்தவர்களில் எட்டு பேர் பாத்ராக் மாவட்டத்தையும், ஏழு பேர் பலசோர் மாவட்டத்தையும், ஆறு பேர் குர்தா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.படுகாயம் அடைந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.
மேற்கு வங்காளத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு புல்லாரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதில் 31 கிராமங்கள் மூழ்கின.மராட்டிய மாநிலத்திலும் மழை விடாது பெய்து வருகிறது. மும்பையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அங்கு பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன.


Comments
Post a Comment