பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல் ; 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி, ஒருவர் கைது
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிற்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது அந்நாட்டுப் பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் என சந்தேகப்படும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை பங்களாதேஷ் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.
அண்மையில் டாக்காவில் கபே ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த குழுவின் ஈடுபாடுள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.



Comments
Post a Comment