காத்தான்குடியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை காணவில்லை


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் நேற்று 18.07.2016 திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற 16 வயது மாணவியொருவர் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி –04, குபா பள்ளி வீதியைச் சேர்ந்த காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் நூர்தீன் ‪நஜிமுதீன் பாத்திமா தஸ்னீகா (வயது-16) என்ற மாணவி வழமை போன்று திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்றார்.

.ஆயினும், திங்கட்கிழமை பாடசாலை முடிந்து ஏனைய மாணவிகள் வீடு திரும்பிய போதும் தமது மகள் இன்று (19.07.2016) செவ்வாய்க்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
.இதேவேளை, பாடசாலை சீருடையுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த மாணவி திங்கட்கிழமை பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை பாடசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

.மாணவி பற்றிய தகவல்களை அறிந்தால் காத்தான்குடி பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையம்-0652246595

Comments