புதிய அரசியலமைப்பு குறித்த வரைபு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை . முல்லை இலங்கை
.
புதிய அரசியலமைப்பில் இறைமை மக்களுக்காக தேசத்துக்கா என்பது தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் எடுக்கும். இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த வடிவத்தையும் தயாரிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார்.
நாங்கள் கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்துகின்றோம். அதனூடாக ஒரு முடிவுக்கு வர முடியும். பாராளுமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Comments
Post a Comment