உயர்தர பரீட்சைக்கு செல்கின்ற மாணவர்களுக்கான அறிவுரைகள்..!



உயர்தர பரீட்சைக்கு செல்கின்ற மாணவர்கள் கீழுள்ள சில அறிவுறுத்தல்களை பின்பற்றுவது சிறந்தது.

பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பதாக சமூகமளிப்பது சிறந்தது- இதனால் வீணான காலதாமத்தினையும், மனதளவில் ஏற்படும் சஞ்சலங்களையும் தவிர்க்க முடியும்.

பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பரீட்சை சுட்டெண்ணுக்கான மண்டபம், மற்றும் உங்களுக்கான கதிரையினை முன் கூட்டியே இணங்காணுவது சிறந்தது.

பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பழைய நண்பர்களுடன் அதிகளவு பேச்சுவார்த்தை செய்வதனை தவிர்க்கவும்- அந்த நேரத்தை தயார்ப்படுத்தலுக்கு பயன்படுத்தலாம்- (உங்கள் நண்பர்களை பரீட்சை நிறைவடைந்தவுடன் சந்திக்கலாம்)

உங்களது அடையாள அட்டை, மற்றும் பொருத்தமான பேனா, பரீட்சை நுழைவு சீட்டு என்பவற்றில் எப்போது உங்களது கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

கடிகாரம் கட்டாயம் அணிந்துச்செல்வது கட்டாயம்- யாரும் இதனை மறக்க வேண்டாம்- கடிகாரத்தில் ஒரு நிமிடம் கூட பிழையாக ஓடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்தவும்-

பரீட்சை ஆரம்பிக்க முன் மேலதிக தாள்கள் உங்களுக்கு வழங்கப்படும்- தேவைப்படும் மேலதிக தாள்களை அவ்விடத்திலே கேட்டுப்பெற்றுக்கொள்வது கட்டாயம். இடையில் கேட்பதால் வீணான காலதாமதம்.

பரீட்சை மண்டபத்தில் பரீட்சை தாளில் மாத்திரம் உங்களது கவனம் இருக்கட்டும்- அது உங்களுக்கும் சிறந்தது, ஏனையவர்களுக்கும் சிறந்தது.

பரீட்சை மண்டபத்தில் உங்களுடைய பரீட்சை அனுமதி சீட்டில் ஆரம்பித்திலேயே கையொப்பம் இட்டு விடவும், இடையில் போடுவதால் உங்களது எண்ணங்களில் திரிபு ஏற்படும்.

உங்களது சக பரீட்சார்த்திகளின் எழுத்தோட்டங்களை அவதானிப்பதனை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளுங்கள்.

விடைகளை தெளிவாக, மயக்கநிலையற்ற வகையில் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பரீட்சை நேரங்களில் பத்தட்டப்படுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள், பரீட்சையில் வேகமும், மனதளவில் அமைதியும் பேணப்படுவது முக்கியமாகும்.

ஒரு நேரத்தில் ஒரு வினா மீது மட்டும் உங்களது எண்ணங்கள் இருக்கட்டும், ஒரு வினாவிற்கான விடையெழுதிக்கொண்டிருக்கும் பொழுது, ஏனைய வினாக்கள் அல்லது நீங்கள் எழுத தவறிய வினாக்கள் பற்றியதான உங்களது எண்ணங்களை தவிர்த்துக்கொள்ளுவது சிறந்தது.

வினா இலக்கங்கள் எழுதும்போது பதட்டம் வேண்டாம், மிக உன்னிப்பாக வினா இலக்கங்களை எழுதவும். பரீட்சை சுட்டெண் ஆரம்பித்திலே எழுதிக்கொள்வது சிறந்தது.

உங்களது பரீட்சை நேர அட்டவணையில் எப்போதும் கவனம் இருக்கட்டும்…

பரீட்சை மாணவர்கள் அனைவருக்கும் http://kantalai.blogspot.com/ தளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்-

Comments