.பக்தி பாடல் எழுதி தருவதாக கூறி தேரர் ஒருவர், மாணவிக்கு செய்த கொடுமை வெளியானது... .
15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை பல்லம காவற்துறையினர் கைது செய்துள்ளனர்
கடந்த 17 ஆம் திகதி இரவு குறித்த மாணவி வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது அடுத்த வீட்டில் உள்ள குறித்த இளைஞர் இவ்வாறு மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது
இது தொடர்பாக குறித்த மாணவி தமது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பல்லம காவற்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
..பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
>இதன்போது குறித்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இதற்கு முன்னர் தேரர் ஒருவர் இவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது
பக்தி பாட்டு போட்டிக்காக கொழும்பு பிரதேசத்தில் உள்ள விகாரையொன்று வந்த போது, பக்தி பாடல் ஒன்று எழுதி தருவதாக கூறி குறித்த மாணவியை அந்த தேரர் அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.பின்னர் மேலும் ஒரு இளைஞர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை மேலதி விசாரணையில் தெரியவந்துள்ளது
..எனினும் இது தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்..>இது தொடர்பாக மற்றைய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தேரரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லம காவற்துறை தெரிவித்துள்ளது
.கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்....


Comments
Post a Comment