சிறு குழந்தை உட்பட மூவர் வெட்டிக் கொள்ளப்பட்ட சம்பவம். குழந்தையின் தந்தை கைது.

மட்டக்களப்பு வெல்லவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவேட்டையில் பச்சிலம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் மூவர் இன்று நள்ளிரவு (24.7.2017) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இதில் பச்சிலம் குழந்தை உட்பட ஒரு பெண் மற்றும் பெண்ணின் தந்தை ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான எம்.பிரசாந் (வயது 34) விஜித்தாவையும (வயது 24) அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
இந்த நேரம் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான 56வதுடைய கந்தையா பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான லக்சிகாவினதும் அழும் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த போது கொலையாளியான தனது மருமகன் பிரசாந் மாமனார் கந்தையாவையும் தாக்கியுள்ளதுடன் வெட்டியுள்ளார்.
வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தை பேரின்பம் காயங்களோடு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்தப் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் பொலிசார் இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கொலை செய்யப்பட்டுள்ள விஜிதாவின் கணவரான எம்.பிரசாந்தை கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இக் கொலையை செய்த சந்தேக நபர் நகாக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது ஞாயிற்றுக்கிழமை காலை அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
கொலை செய்யப்பட்டுள்ள விஜிதா மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள எம்.பிரசாந் ஆகிய இருவரும் கணவன் மனைவியெனவும் இவரது பிள்ளையே மேற்படி லக்சிகா எனும் சிறுமியெனவும் கணவன் மனைவியான இவர்கள் இருவரும் கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்வதாகவும் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
இவ்விருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு மூலகாரணமாய் அமைந்துள்ளதென்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று (22.07.2016) கணவன்-மனைவிக்கிடையிலான முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன்- மனைவி ஆகியோர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. கொல்லப்பட்ட குழந்தை தன்னுடையதல்ல என்றும் மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் என்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரசாந் குடும்பத் தகராறு பற்றிய பொலிஸ் விசாரணையின் போது மனைவியிடம் தர்க்கம் புரிந்ததாகவும் தெரியவருகிறது.
குறித்த வீட்டுக்குச் சென்ற களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஸ்த்தளத்தில் விசாரணைகளை மேற் கொண்டார்.
இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிற தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்

Comments
Post a Comment