தோப்பூரில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான கட்டிடம்..




தோப்பூர்ஆயுர்வேத மத்திய மருந்தக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தோப்பூர்  (31) இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாகவும் சுகாதார அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைம’ திறந்து வைக்குமுகமாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்ஆ.எம். நஸரின் வேண்டுகோளுக்கிணங்கவே கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னால்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆ.ஐ.மன்சூர்  திருகோணமலை மாவட்டநாடளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாகிர், ஆர்.எம். அன்வர்   முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஹரிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

–  ஏ.எஸ்.எம்.தாணீஸ் / எப்.முபாரக்

Comments