மாமியாரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த மருமகன் கைது. .முல்லை இலங்கை
மாமியாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த மருமகனை கிரிந்திவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 44 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகநபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதன் நிமித்தம் அவர்களது மகளை பாதுகாப்பு கருதி மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், தனது மகள் பிரத்தியேக வகுப்புக்காக சென்றிருந்த வேளை தனிமையில் இருந்த மாமியாரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவரிடமிருந்து தன்னை பாதுகாப்பதற்காகவே அவரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கியுள்ளதாக மாமியார் பொலிஸாரிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் சந்தேகநபர் தனது கீழ் உதட்டின் ஒரு பகுதியை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தனது கடைசி மகளின் வீட்டுக்கு பாதுகாப்புக்காக அவரிடமிருந்து தப்பிச்சென்ற குறித்த மாமியார், கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
அவரின் முறைப்பாட்டிற்கமைய கிரிந்திவெல பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


Comments
Post a Comment