காத்தான்குடியில் மாணவி காணாமல் போன விவகாரம்; குடும்பஸ்தர் ஒருவர் கைது.


.காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் 18.07.2016 திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற 16 வயது மாணவியொருவர் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.;எனினும் மறுநாள்;இரவு அவர் வீடு திருந்பியிருந்தார்.;இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டிருந்தது.

.வீடு திரும்பிய மாணவியிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைவாக மேற்படி மாணவியைக் கூட்டிச் சென்று தலைமறைவாக வைத்திருந்து விட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்த குடுஸ்ப..ஸ்தர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

.இன்று (20.07.2016) புதன்கிழமை மாலை;வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர்’ மறைந்திருந்தபோது கைது கைது செய்யப்பட்டார்.

.இதேவேளை வீடுதிரும்பிய மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.சந்தேக நபரை நாளை (21.07.2016) வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments