விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது



விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈஸிஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்றில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டென்மார்க்கின் தலைநகர் கொப்பன்ஹேகனிலிருந்து பிரிட்டனின் எடின்பேர்க் நகரில் இவ்விமானம் தரையிறங்கிய பின், விமான நிலைய கட்டடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது இளைஞர் ஒருவர் பயணிகள் மத்தியிலேயே சிறுநீர் கழித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதையடுத்து பொலிஸாருக்கு விமான ஊழியர்கள் அழைப்பு விடுத்தனர்.

பின்னர் மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டார். 26 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments