பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமுலாகிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இன்று நள்ளிரவு முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 01 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததே இந்த விலை குறைப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.


Comments
Post a Comment