நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை ! .
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழம்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால்இ பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று (28) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.ஹெலோ கோப்' நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய்கான பங்குகளைக் கொள்வனவு செய்தார் டின்ற குற்றச்சாட்டின் கீழேயேஇ நாமல் உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
.இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காகஇ நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அதனால்இ அவர் உள்ளிட்ட அறுவர் மீதுஇ பணச் சலவைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறியேஇ இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment