அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது துருக்கி அதிபர் குற்றச்சாட்டு



துருக்கியில் இந்த மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள் துருக்கிக்கு துணை நிற்க மறுத்துள்ளதாக அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவாக அங்காராவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் எர்துவான், துருக்கி ஜனநாயகத்தை காட்டிலும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி புரிந்தவர்களின் விதியை எண்ணி கவலைப்படுவோர், இந்த நாட்டின் நண்பர்களாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர், இந்த சதியில் அமெரிக்காவின் பங்கு எதுவுமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

துருக்கியின் மேல்நாட்டு கூட்டாளிகள் இந்த சதிக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகு துருக்கி ராணுவத்தில் நடத்தப்பட்ட களையெடுப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Comments