மாணவன் ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது.- மத உரிமையை நிலை நாட்டிய - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)- வீடியோ

கொழும்பு, வத்தளை, ராகுல வித்தியாளயத்தில் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் ஒரு மாணவனை காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்திய ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலரையும் சந்தித்த மாணவனின் தந்தை சகோ. ஸஜானி அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் முன்வராத நிலையில்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக சகோ. ஸஜானியின் மகனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் முகமாக மனித உரிமை ஆணைக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த ஆணைக் குழு குறித்த ஆசிரியர், மற்றும் பாடசாலை நிர்வாகத்தை கண்டித்துள்ளதுடன், இனிமேல் இது போன்று யாரும் முஸ்லிம்களை காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் இது பற்றி அனைத்து பாடசாலைகளுக்கும் தெளிவு படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக் குழு பணித்துள்ளது.
இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே சிரம் பணிவோம் என்ற ஏகத்துவக் கொள்கைக்காக உதவி வேண்டிய சகோ. ஸஜானிக்கு ஏகத்துவத்தை நிலைநாட்ட SLTJ சார்பில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இறைவன் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளான். - அல்ஹம்து லில்லாஹ்.
முழு விபரத்தை அறிய மாணவனின் தந்தை சகோ. ஸஜானி அவர்கள் இது பற்றி விளக்கும் வீடியோவை பார்வையிடவும்.

Comments
Post a Comment