பிரதேசத்தில் சம்பவம். (மகள் சீரியஸ்) தொடர்ந்து T.V பார்த்ததற்காக மகளை அரிவாளால் வெட்டிய தந்தை.. மட்டக்களப்பு பிரதேசத்தில் சம்பவம். (மகள் சீரியஸ்)
இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளை அரிவாளால் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதீவான் எம்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வியாழனன்று இச் சம்பவம் மட்டக்களப்பு கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இராசையா சசிகலா (வயது 28) என்பவர் அரிவாள் வெட்டுக்குள்ளான நிலையில், சந்திவெளிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்து ஏனையோரின் உறக்கத்தை குழப்ப வேண்டாமென்று தந்தை தொடர்ந்து கூறிவந்தார்.. அவ்வாறே, சம்பவதினத்தன்றும் சகோதரி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த தந்தை சகோதரியை அரிவாளால் வெட்டினார் என மற்றுமொரு சகோதரி பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment