அக்குரஸ்ஸையில் 03 மாணவர்கள் மீது கத்திக்குத்து

அக்குரஸ்ஸ நகரில் இன்று பகல் இரு தரப்பிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அக்குரஸ்ஸ நகரின் துணிக்கடை ஒன்றில் குறித்த கடை ஊழியர்களுக்கும், இம்முறை உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் சிலருக்கும் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த முறுகல் நிலையானது இன்று நகரில் வைத்து மாணவர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு முற்றியுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கத்திக்குத்துக்கு இலக்கான மூன்று மாணவர்களுள் ஒருவர் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனைய இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Comments