ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் பொய்கள் சொல்லி உலக சாதனை.

பொய் பேசுவது பெரும் பாவம் ஆகும்
பொய்யை பரப்புவது அதனைவிட பெரிய பாவம்.
.
இன்று பலர் வட்ஸ்ஆப்பில் வரும் விடயங்களை ஆராயாமல்
இது உண்மையாக இருக்குமா?
பொய்யாக இருக்குமா? என்று
ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல்
தமக்கு தெரிந்த பல ஆயிரம் பேருக்கு தகவல்களை
பகிர்ந்து கொள்கிறார்கள்.
.
நீங்கள் பகிரும் விடயம் பொய்யானதாக இருக்குமிடத்து
நீங்கள் பகிர்ந்த ஒரு விடயம் 10 ஆயிரம் பேருக்கு
சென்றால்  நீங்கள் சில நிமிடங்களில்
10 ஆயிரம் பொய் சொன்னதற்கான பாவத்தை சம்பாதித்துக் கொள்வீர்கள்
.
அல்லாஹ்வின் புனித குர்ஆனில் வரும்
பின்வரும் வசனத்துக்கு
10 ஆயிரம் முறை மாற்றம் செய்தவறாக
10 ஆயிரம்முறை அல்லாஹ்வுக்கு
அல்குர்ஆனுக்கு
மாற்றம் செய்தவராக ஆகிவிடுவீர்கள்.
.
குறிப்பாக சில விடயங்களை பகிர்ந்தால்வட்ஸ்ஆப் நிறுவனம் 1 ரூபாய் தருவார்கள் என்று வரும்
அனைத்து தகவல்களும் பொய்யானதே.
.
வட்ஸ்ஆப் நிறுவனம் அப்படி யாருக்கும் பணம் வழங்குவதில்லை.
.
இதனை வாசித்ததன் பின்னராவது
விடயங்களை பகிரும் போது உறுதிப்படுத்திக்கொண்டு பகிருங்கள்
அல்லது பகிராமல் விட்டுவிடுங்கள்.
வீணாக எமது நன்மைகளை வீணாக்கிக்கொள்ளாமல் இருப்போம்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
ARM INAS

Comments