தனது 11 வது வயதில் தகவல் தொழில்நுட்ப பட்டம் பெற்ற மாணவி ...
கண்டி பொல்கொல்லையில் உள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார்.
வைஷின்யா பிரேமானந் தனது பெற்றோர்களுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இம்மாணவியின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசும் வழங்கி வைத்தார்.


Comments
Post a Comment