13 வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்திய தந்தை விளக்கமறியலில்.
.(2016-08-20) திருகோணமலை வரோதய நகர் பகுதியில் பதின் மூன்று வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்திய தந்தையை இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேற்று வெள்ளிக்கிழமை(19) உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையிலே தாய்யின் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையிலே பதின் மூன்று வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்துத்வுதாக அயல் வீட்டுக்காரர்களினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வியாழக்கிழமை(18) மாலையில் கைதுசெய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை வெள்ளிக்கிழமை(19) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments
Post a Comment