மூதூர் தமிழ் யுவதியின் 134750 பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த முஸ்லிம் சகோதரர்

நேற்றைய தினம் மூதூர் நகரத்திற்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்த தமிழ் யுவதி ஒருவர் தனது பணப்பையை தவறி விட்டுள்ளார்.

அவ்வழியால் வந்த டானா ஜுவலரி உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.எம். சலீத் அதனை கண்டெடுத்ததுடன் அதனை உரிய தமிழ் யுவதிக்கு கொடுத்துள்ளார்

பிறர் சொத்து எமக்கு எதற்கு என்பதற்கு இது நல்ல உதாரணம்

காணாமல் போன பணப்பை தனக்கு கிடைத்து விட்டதனையும் கண்டெடுத்தவர் அதனை கொடுக்க முன்வந்ததனையும் எண்ணி குறித்த யுவதி ஆனந்தகக் கண்ணீர் விட்டார்.

தமிழர்களிடத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் நல்லெண்ணம் ஏற்படுவதற்கு இச்சம்பவம் வழிகோலியுள்ளது.

Comments