புத்தளத்தின் மகா ராணி ” அப்துல்லாஹ் பாத்திமா : தான் பிச்சையெடுத்த காசில் வெட்டாளைப் பாடசாலைக்கு 1500/= க்கு கற்களை வாங்கிக் கொடுத்து மகத்தான சேவை செய்தார்
முள்ளிபுரம் அப்துல்லாஹ் பாத்திமைாவைப் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என்று மனம் நாட்டங் கொண்டபோது நேற்று மாலை வாழ்க்கையில் முதன் முறையாக புத்தளம் நகரத்தை விட்டு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புத்தளம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் உள்ள முள்ளிபுரம் பக்கமாக சென்றோம்.
அப்துல்லாஹ் பாத்திமா என்று பெயர் சொன்ன மாத்திரத்தில் யாராலும் அடையாளம் காட்டக் கூடிய அளவுக்கு முகவரி உள்ளவர்களில் ஒருவராக பாத்திமா இருக்கவேண்டாமா? பாத்திமாவுக்கு உள்ள ஒரே ஒரு அடையாளம்தான் “பிச்சைக்காரக் கண்ணா”
”ஹதியா தாங்கம்மா….” என்ற ஈனக் குரல் கேட்டு ஏதோ பெரும் தருமத்தைச் செய்வது போல நினைத்து ஒரு ரூபா நாணயக் குற்றியை அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் நிறைந்த இந்த பூமியிலே நாளாந்தம் படியேறிப் படியேறி இறங்குகின்ற அப்துல்லாஹ் பாத்திமைாவைப் பற்றி என்னதான் எழுதிக் கிழிப்பது?
கணவணைப் பல வருடங்களுக்கு முன்னர் பறி கொடுத்து இந்த பாத்திமா ஒரு பெண் பிள்ளையைக் கட்டிக் கொடுத்தவிட்டு இன்னுமொரு திருமணமாகாத இளம் பிள்ளையுடன் அவளுக்குப் பின்னால் உள்ள தன்னந் தனியான குருவிக் கூட்டில் வாழ்கிறார். யாசித்தல்தான் இவரது நிலையான வருமானம். அந்த வருமானத்தில் அந்தப் பிரதேசத்தில் உள்ள சன்மாரக்கக் கல்வி நிலையத்தில் மகளை மார்க்கம் கற்க வைத்துள்ளார். கல்வி நிலையத்தின் மாதாந்த கட்டணமாக 2000.00 ரூபாவைத் தேடிக் கொள்வதற்கு இந்த ”ஹதியா” பணம்தான் பாத்திமாவுக்கு உதவுகிறது.
இதெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் சராசரி நிகழ்வுதான். இதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் எண்ணத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை பெரிதாகச் சொல்ல ஒன்று இருக்கிறது. அதுதான் இந்த “பிச்சைக்காரக் கண்ணா” பிச்சை எடுத்து பிச்சை எடுத்து எறும்பு போலச் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தில் செய்த ஒரு கொடை.
மீனவச் சமுகத்துப் பாடசாலை என்பதால் 70கள் முதலே மாற்றாந்தாய் கவனிப்புக்குள்ளாகி முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிற ”முள்ளிபுரம் அஸன் குத்தூஸ்” வித்தியாயலகத்தின் நிலத்தை நிலக் கொள்ளைக் காரர்களிடமிருந்து காப்பாற்ற அப்பாடசாலையின் அதிபர் எச்.ஏ. ஜப்பார் அவர்களின் பாடசாலையைச் சுற்றி சுற்று மதில் அமைக்கும் திட்டத்துக்கு 50 சீமெந்துக் கற்களை. அன்பளிப்புச் செய்ய 1500 ரூபாவை இந்த சீமாட்டி செலவு செய்துள்ளார் என்றால் அதில் ஆச்சரியம் இல்லையா?
தனது பாடசாலைக்கு யாசகம் செய்த காசில் உதவிய அப்துல்லாஹ் பாத்திமாவின் சேவையைக் கண்டு பாடசாலையின் அதிபர் ஜப்பார் அழுதே விட்டாராம் என்று காதில் வந்த செய்திகள் கூறின.
” ஹதியா” காசில் இப்படி ஒரு தருமம் செய்ய ஏன் நினைத்தீர்கள்” என்ற கேள்விக்கு பாத்திமா தந்த பதில் ” நம்ம பிள்ளைகள் இல்லாடியும் பிள்ளைகளின் பிள்கைளகாவது படிக்கும் ஸ்கூலுக்கு நாம் உதவி செய்தால் நல்லதுதானே” என்று எம்மிடம் கேட்கிறார் பாத்திமா.
நம்மைச் சூழ கௌரவப் பிச்சைக்காரர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் வருடத்தில் இரண்டு முறை வரும் பெருநாட்களில் ”ரேஸ்” நிழக்ச்சியை நடாத்த ஊரில் உள்ள வசதி படைத்தவர்களிடம் யாசிக்கிறார்கள். இந்த கௌரவ யாசகரகளுக்கு நிறை நிறையவே கிடைக்கின்றன. பயம் ஒரு காணரம் முகஸ்துதி ஒரு காரணம்.
யாசித்துப் பெற்ற பிச்சைப் பணத்தில் நடாத்தம் கேளிக்ககைளில் எனது நிகழ்சிக்கு அவன் வரக் கூடாது இவன் நிகழ்ச்சிக்கு இவன் வரக் கூடாது என்ற இறுமாப்புக்கள் அடிதடிகள் வீறாப்புக்கள் வெற்றிக் கொக்கரிப்புக்களைப் பார்க்கும்போது இந்த பாத்திமாக்களுக்கு இருக்கும் சமுகப் பற்றில் இந்த கௌரவப் பிச்சைக்காரர்கள் கொஞ்சம் யாசித்துப் பெற வேண்டும். என்ற ஒரு செய்தியை உரத்துச் சொல்லத்தான் நாம் முள்ளிபுரம் பாத்திமாவின் இந்த அறிமுகம்
”கொடுத்தால் உண்டாவது தர்மம்
எடுத்தால் உண்டாவது பாவம்
மனத்தால் இன்னொருவர் பொருளை
நினைத்தால் உன் நிம்மதி மறையும்……

Comments
Post a Comment