கடலில் மூழ்கி 15 வயதான சிறுவன் மாயம்!

கடலில் மூழ்கி 15 வயதான சிறுவன் காணாமல் போயுள்ளார்.

மொறட்டுவை அங்குலானை பிரதேசத்தில் தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள கடலில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படை சுழியோடிகள் மற்றும் பொலிஸார் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments