பசிலின் 180 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள்  பறிமுதல்!

பசில் ராஜபக்ச தனது தலைமையகமாக மாற்ற நோக்கில் நிர்மாணித்த 180 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் மற்றும் காணி என்பன அரசுடமையாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலக்கம் 28 என ஒருதொட்ட வீதி, கம்பஹா என்ற முகவரியில் உள்ள சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்படவுள்ளது.

இந்த சொத்துக்கான உரிமையை உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் உரிமை உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் இந்த சொத்து அரசுடமையாக்கப்படுவது நிச்சயம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வனையில் உள்ள 16 ஏக்கர் நிலம் மற்றும் வீடு என்பன ஏற்கனவே அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பயிற்சி நிலையமாக அது மாற்றப்படவுள்ளது.

Comments