வங்கியிலிட கொண்டு சென்ற 18 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மிரட்டி கொள்ளை.

பெண் மற்றும் ஆண் ஒருவரால்,  வங்கிக்கு கொண்டு செல்லபப்ட்ட 18 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) நண்பகல் வேளையில், குறித்த பணத்தை அம்பலாங்கொட நகரின் தனியார் வங்கி ஒன்றில் வைப்பிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ள வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கூரிய ஆயுதத்தை காட்டி, குறித்த இருவரையும் மிரட்டி இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments