ஸ்ரீ லங்கன் விமானசேவை பயண அமர்வுகளில் மாற்றம்!
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் திருத்தப் பணிகளிற்காக எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை தினமும் 8.00 தொடக்கம் மாலை 4.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூன்று மாத காலங்களிற்கு மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஸ்ரீ லங்கன் விமானசேவை அதன் பயணஅமர்வுகளில் மாற்றம் செய்துள்ளது.
இதனடிப்படையில் சிங்கப்பூர், திருச்சி,சென்னை, பெங்களூர், கொச்சின் மற்றும் மாலே நோக்கி புறப்படும் விமான சேவைகளின் அமர்வுகளை இரத்து செய்துள்ளது.
இருப்பினும், குறித்த இரத்த்துச் செய்த அமர்வுகளிற்காக வேறு அமர்வுகள் பயன்படுத்தபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷங்காய், புதுடெல்லி, பீஜிங் மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளிற்கு செல்லும் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த காலப் பகுதியில் இரவு நேர போக்குவரத்து பணிகள் மட்டுமே இங்கு நடைபெறுமெனவும் மாற்று செயற்பாடுகளிற்காக மத்தளை சர்வதேச விமான நிலையத்தினை பயன்படுத்துமாறு விமான சேவைகளிற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments
Post a Comment