நஜ்ரான் எல்லையில் சஊதிபடை மேற்கொண்ட தாக்குதல்களில் பல கிளர்ச்சியாளர்கள் பலி. 23/8/2016 Comments
ஸஊதி அரேபியாவின் எல்லைப்புற நகரான நஜ்ரான் பிரதேசத்திற்குள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் மீது சஊதி அரேபிய அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் டசன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சஊதி அரேபிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நஜ்ரானுக்கு அப்பாலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான ஏவுகணை தளத்தினையும் தாக்கியழித்துள்ளதாக அவர்கள் மேலும் உறுதிப் படுத்தியுள்ளனர்.
சஊதி எல்லையானது சிவப்பு அபாய கோடாகும், யாரும் இங்கு ஊடுருவ அனுமதிக்கப்படமாட்டாது என்கின்ற தெளிவான செய்தியினை எல்லையினுள் ஊடுருவ முயற்சிப்போருக்கு ஏற்கனவே சஊதி அரேபிய இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வாறு சஊதி எல்லையினுள் ஊடுருவ முயன்ற பல ஹூதி கிளர்ச்சியாளர்கள் சஊதி இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதுடன், ஹூதிக்களால் ஏவப்பட்ட பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சஊதி வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கியழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment