2500 திர்ஹமுக்கு குழந்தை விற்பனை. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சிக்கிய இலங்கை பெண்.

தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இலங்கைத் தாய் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்த நாடு கடத்தப்பட்டுள்ளார்.

2500 திர்ஹமுக்கு குறித்த குழந்தையை விற்க முயன்றுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத் தகவல் ஒன்றின் படி குழந்தையை வாங்குபவர் போல் சென்ற பொலிஸாருக்கு குழந்தையை விற்க முயன்ற போது அந்த தாய் கைது செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தன்னிடம் வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையின் காரணமாகவே குழந்தையை விற்க முயற்சித்ததாக குறித்த இலங்கைத் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மனித கடத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரின் குறித்த பெண் மீது சார்ஜா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்னை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தின் தலைமை நீதவான் யாகூப் அல் ஹமாதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments