கீதா குமாரசிங்க குடி போதையில் இருந்தால்தான் 2 கோடி கதையை சொன்னார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க எப்போதும் மதுபோதையில் இருப்பதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க எப்போதும் மதுபோதையில் இருக்கின்றார். இதனால் அவர் என்ன பேசுகின்றார் என்று அவருக்கே தெரிவதில்லை என்று முதலமைச்சர் குற்றம் சுமத்தினார்.
அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போதும் இவ்வாறே நிதானம் இன்றி பேசினார். காரணம் அவர் குடிபோதையில் இருந்தார்.
தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய பாதயாத்திரையில் இரண்டு கோடி மக்கள் பங்கு பற்றியதாக கூறியுள்ளார். சுயநினைவில் இருந்திருந்தால் கீதா குமாரசிங்க இவ்வாறு கூறியிருக்க மாட்டார் எனவும் இசுறு சாடினார்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினர் எப்போதும் மதுபோதையில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.


Comments
Post a Comment