சகீப் சுலைமான் படுகொலையின் பின்னணியில் 4 கோடி கொடுக்கல் வாங்கலா? வெள்ளவத்தை பிரபல வர்த்தகர் மீது தீவிர விசாரணை
பம்பலப்பிட்டி, கொத்தலாவல எவனியூ பிரதேசத்தில் கடத்தப்பட்டு மாவனல்லையில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கலே காரணமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இவரை விட வெள்ளவத்தை பகுதியின் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரையில் வீதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்குகென 11 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தர்.

Comments
Post a Comment