கேன்சரில் நோயில் இருந்து மீண்டு வந்தவர் 54 வயதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பாய்மர படகோட்டம் நாக்ரா-17 கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில், அர்ஜென்டினாவின் சான்டிங்கோ லாங்கே-கரான்ஸா சரோலி ஜோடி தங்க பதக்கத்தை தட்டி சென்றது. இதில், 54 வயதான லாங்கேதான் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் மிக மூத்தவராக இருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் இவர் நுரையீரல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டு வந்து லாங்கே தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் ரியோ ஒலிம்பிக்கில் மிக அதிக வயதில் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மகன்கள் யாகோ மற்றும் க்ளாஸ்தான் எனது பலம். எனக்கு முன் மாதிரியும் அவர்கள்தான் என்றார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் வாட்டர் ஹவுஸ்-லிசா டர்மானின் வெள்ளி பதக்கத்தையும், ஆஸ்திரியாவின் தாமஸ்-டன்ஜா ப்ராங்க் ஜோடி வெண்கல பதக்கமும் வென்றனர்.

Comments