நேற்றைய தரம் 5 புலமைபரிசில் பரீட்சை குளறுபடிகள் ...

ஐந்தாம் வகுப்பு புலமைபரிசில் பரீட்சை  நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில் பரீட்சையில் தோற்றிய பலர் பலதரப்பட்ட அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தளை மாவட்ட மற்றும் மஹியங்கனை பரீட்சை அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்பட்டு ஆரம்ப சமிக்சை வழங்கப்படாததால் மாணவர்கள் சுமார் 20 நிமிடங்கள் தமாதமாகி பரீட்சை எழுத ஆரம்பித்துள்ளனர்.அதனால் கோபமடைந்த பெற்றோர் பரீட்சை நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இது தவிர பதியதளாவ பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட பரீட்சை நிலையம் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் மறதன்கடவலை பிரதேசத்தில் தவறான  பரீட்சை நிலையத்துக்கு மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சம்பவமும் இடன்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற விஷேட சம்பவமாக நாவலப்பிடி அபுகஸ்தலாவ பொல்வதுர முஸ்லீம் மஹா வித்தியாலய மாணவனுக்கு பரீட்சையில் தோற்ற பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியை தடை விதித்துள்ளமையை தொடர்ந்து நாவலப்பிடி பொலிஸார் தலையிட்டு குறித்த மாணவனுக்கு பரிட்சையில் தோற்ற ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் இது போன்ற பல குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன.

Comments