வர்த்தகர் ஷகீப் சுலைமான் படுகொலை. விசாரணையை அடுத்து 5 வர்த்தகர்களுக்கு சிக்கல்.

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு, மாவனெல்ல, ஹெம்மாத்தகமவில் சடலமாக மீட்கப்பட்ட 29 வயதான வர்த்தகரான மொஹமட் ஷகீப் சுலைமான், படுகொலை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகர்கள் ஐவர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Comments