வர்த்தகர் கொலை: 5 வர்த்தகர்களிடம் இன்று விசாரணை!
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அவர்கள் விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 5 பேருக்கும் கொலை தொடர்பான தகவல்கள் தெரியுமெனவும் இதன்படி இவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment