5 வர்த்தகர்களின் வாகனம்,தொலைபேசி பரிசீலனை!

பம்பலப்பிட்டி வர்த்தகர் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேககிக்கப்படும் ஐந்து வியாபாரிகளின் வாகங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவகையில், கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் குறித்த ஐவரினதும் வாகனங்கள் பயணித்த தூரங்கள் தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த வகனங்களில் பணியாற்றும் சாரதிகள் 10 பேரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் குறித்த வர்த்தகர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் தேடல்கள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Comments