70 வயது மகிந்தவால் இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது.. 2020 ஆம் ஆண்டும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை சூறையாடிய கொள்ளையர்கள் புதிய கட்சி அமைப்பதன் மூலம்
ஒருபோதும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. இவர்களது கடந்தகால அநியாயங்கள், அட்டூழியங்கள், மோசடிகள் படிப்படியாக அம்பலமாகி வருகின்றன. இனவாதிகளை தம்வசம் வைத்துக்கொண்டு வேறு கட்சி அமைக்க முயலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஒருபோதும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பட்டயப் பொறியியலாளர் எம்.எம்.எம்.அம்ஜாதை வரவேற்கும் வைபவம் நேற்று முன்தினம் பேருவளை சாரா மண்டபத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாண சபை அமைச்சர் சுமித்லால் மெண்டிஸ், பேருவளை முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத் உட்பட நகர சபை, பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், பெருமளவிலான மக்கள், பங்கு பற்றிய இக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறியதாவது,
70 வயது தாண்டிய பின்னர் புதிய கட்சியொன்றை அமைக்க முயற்சி செய்யும் மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்தப் பலனும் கிட்டப் போவதில்லை. 30 தொடக்கம் 40 வயது காலத்தில் அவர் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தால் 60 தொடக்கம் 70 வருடங்களாகும் போதாவது மாற்றமொன்றை காணக்கூடியதாக இருந்திருக்கும்.
நாட்டை சூறையாடிய மாபெரும் கொள்ளையர் கோஷ்டியினர் புதிய கட்சி அமைப்பதன் மூலம் ஒரு போதும் ஆட்சியை கவிழ்க்கவே முடியாது. நாட்டை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்று மக்களின், நாட்டின் வளங்களை விழுங்கிய மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தின் கடந்த கால அநியாயங்கள், அட்டூழியங்கள், மோசடிகள் படிப்படியாக அம்பலமாகி வருகின்றன.
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் உற்சாகமளித்து சமூகங்களுக்கிடையே பிளவுகளை, பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற முயன்ற மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
ராஜபக் ஷ யுகத்திற்கு மக்கள் சாவுமணி அடித்துவிட்ட நிலையிலும் கூட இன்று வேறு கட்சி அமைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயல்கிறார்.
டி.ஏ.ராஜபக் ஷவின் புதல்வர் ஒருவர் இப்படியான அநியாயத்தை செய்வதை மக்கள் சிறிதும் விரும்பவில்லை. பச்சை பச்சையான இனவாதிகளை தன் வசம் வைத்துக் கொண்டு வேறு கட்சி அமைக்க முயலும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு மீண்டும் ஒரு போதும் ஆட்சியை கைப்பற்ற முடியாது. 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே உருவாகும்.
நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. சகல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மஹிந்தவின் ஆட்சியில் இனவாதம் தலைவரித்தாடியது. கோத்தாபய ராஜபக் ஷ ஒரு மாபெரும் இனவாதி. அவரை பேருவளைக்கு அழைத்து சிலர் புரியாணி கொடுத்ததன் மூலம் முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் இந்த சுயநலவாதிகள் அநீதி இழைத்தனர்.
பேருவளையில் நடந்த அநியாயமே மஹிந்தவின் தோல்விக்கு பிரதான காரணமாகும். சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சியை நாட்டில் மக்கள் உதயமாக செய்ததன் மூலம் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரை வரவேற்க இன்று ஐ.தே.கட்சியினரும் சமுகமளித்துள்ளனர். இந்த முன்மாதிரி மிக்க அரசியல் கலாசாரம் நாட்டில் தொடர வேண்டும். ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிரதமர் ஐ.தே.கட்சியையும் சேர்ந்தவர்கள். அமைச்சரவையில் இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
புதிய அமைப்பாளர் எம்.எம்.அம்ஜாத் ஒரு படித்தவர். பேருவளை மக்களுக்கு மாகாண சபை மூலம் அதிக சேவைகளைச் செய்தவர். அவருடன் இணைந்து பேருவளை மக்கள் செயற்பட வேண்டும். ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஒருவரே இன்று பேருவளைக்கு புதிய அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

Comments
Post a Comment