ஐ நா 71 ஆவது அமர்வில் ஜனாதிபதி

அடுத்த மாதம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 29 ஆம் திகதி உரையாற்ற உள்ளார்.

அதற்கு முன்னராக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து ஏற்பாடுசெய்துள்ள  அகதிகள் மற்றும் குடியேறிகள் தொடர்பான மாநாடு அடுத்த மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் தலைமை தாங்கவுள்ளார்.

இதுவே அவர் ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் கலந்துகொள்ளும் இறுதி நிகழ்வாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments