8 ஆயிரத்து 242 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில்…

இந் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 8 ஆயிரத்து 242 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 265 பேர் பெண்கள் என அந்த அமைச்சு குறிப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு உள்ளான கைதிகள் 313 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 442 பேரும் அதில் உள்ளடங்குகின்றனர்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை தொடர்பாக மேற்முறையீடு செய்து இதுவரை தீர்வு கிடைக்காத 474 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

Comments