விமானத்தின் கருப்பு பெட்டி ( BLACK BOX )..
விமான விபத்துக்கள் நடக்கும் போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி ந்டக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம்பெறும். அது என்ன கருப்புப் பெட்டி? அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கருப்பு நிறத்தில் இருக்காது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் (BLACK BOX) உண்மையில் கருப்பு நிறம் கிடையாது அது நன்கு பிரகாசமான சிவப்பு அல்லது ஆரஞ்சு (ORANGE/LUMINAS) நிறத்தில் காணப்படும். சூரிய ஒளியில் அல்லது வேறு வெளிச்சத்தில் அதன் நிறம் அடர்ந்த இருளிலும் பார்வைக்கு தெரியக்கூடிய வகையில் இருப்பதர்க்கே அவ்வாறு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இது இரண்டு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது, (FDR – Flight Data Recorder) எனப்படும் விமானத்தின் இயக்கம் தொடர்பான தகவல்களை சேமிக்கக்கூடியதும் மற்றது (CVR – cockpit voice Recorder) எனப்படும் விமானி அறையில் இடம்பெறும் உரையாடல்கள், ஒலிகள் என்பனவற்றை பதிவு செய்யும் கருவியாகும். விமானத்தின் எரிபொருள் வேகமாகவும் அதிக வெப்பத்துடனும் எரியும் தன்மை கொண்டது, சில வேளைகளில் அது 1000oC வெப்பநிலையில் கட்டுப்பாடின்றி எரியும் நிலை ஏற்பட்டால் அதையும் தாங்கும் தன்மை கொண்டதாகவும் அதாவது 1800oC மேல் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவும், அதிக எடையை தங்கக்கூடியதுமாவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக (Commercial Jets / Aircraft) பயணிகள் விமானம் 450Kt அதாவது மணிக்கு 900Km/h வேகத்தில் 39000ft – 42000ft அடி உயரத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு நாடு வானில் செல்லும்போது கட்டுப்பாடு இன்றி தரையை நோக்கி வேகமாக வரும் பொழுது, அதன் உயரம், எடை, புவி ஈர்ப்பு விசை என்பன ஒருமித்து அதன் வேகத்தை பலமடங்கு அதிகமாகக்கிவிடும். இவ்வாறு அசுர வேகத்தில் வந்து தரையில் மோதி சுக்குநூறாக போனலும் அதன் கருப்பு பெட்டி சிதைவடையாமல் இருப்பதற்காக (G-Force Test) பண்ணப்பட்டு பத்திரமாக விமானத்தின் வால் பகுதியில் வைக்கப்படும். இந்தப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். இதிலிருந்து பீப்.. பீப் ..என்ற ஒலி எப்போதும் வந்து கொண்டேயிருக்கும்; விமான விபத்திற்குப் பிறகு இப்பெட்டியை தேடிக் கண்டுபிடிக்க இந்த ஒலி உதவுகிறது. கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது. விமானம் செயலிழந்த பின்னும் 30 நாட்களுக்கு மேலாக இதன் பேட்டரி (BETTARY) செயட்பட்டு இதன் இருப்பிடத்தை காட்டும் சமிக்கை (SIGNALS) வழங்கும் திறன் கொண்டது.
உலகில் இதுவரைக்கும் இடம்பெற்ற விமானவிபத்துகளின் காரணம்கள் அனைத்தும் துல்லியமாக அறியப்பட்டு அது போன்ற மற்றதொரு விபத்து நிகழாமல் தவிர்ப்பதற்கு விமானக்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் விரிவாக்கப்பட்டு பாதுகாப்பான ஆகாயப்பயணத்திற்கான வழிவகைகளை அமைப்பதில் இந்த கறுப்புப்பெட்டி பெரிதும் பங்காற்றிக்கொண்டிருக்கின்றது என்பது விமானத்துறையில் உள்ள அனைவரம் நன்கு தெரிந்ததே.

எவ்வாறாயினும், தொழில்நுட்பம் மனிதனால் இயற்றப்பட்ட ஒரு வரம்புக்கு உள்பட்ட அளவில்தான் செயல்படும் என்பதற்கு மாயமான ஒரு சில விமானங்களின் துலக்கப்படாத மர்மங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் 239 பயணிகளுடன் தொலைந்து போன மலேசிய விமான சேவையின் MH-370 விமானத்தை முக்கியமாக குறிப்பிடலாம்.

Comments
Post a Comment