கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு!!

கொட்டாஞ்சேனை புனித பெனடிக் மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் விஷம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உடலமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, புதல்வர் மற்றும் புதல்வி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மரணங்கள் தொடர்பான விசாரணைகள் காவற்துறையினரால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update : Friday, August 19, 2016 19.46
---------------------------------------------------
கொட்டாஞ்சேனை - புனித பெனடிக் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று சடலங்கள் இன்று காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ,மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் அவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Comments