பத்திரிகைகளில் மணமகள் தேவை என்று விளம்பரம் குடுத்தவர் கைது...

பத்திரிகைகளில் மணமகள் தேவை எனும் விளம்பரங்களை பிரசுரித்து, அதன்பின்னர் தொடர்பினை ஏற்படுத்தி, திருமண வாக்குறுதியை வழங்கிவிட்டு, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தென்னிலங்கையில் ஒருவரைப் பொலிஸார் கைது
செய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. பெண்களோடு பேசி திருமண வாக்குறுதிகளை வழங்கி, ரூம் போட்டு அவர்களோடு உல்லாசமாக இருப்பது. மேலும் சில பெண்களை கழியாட்ட விடுதிக்கு கொண்டு சென்று பொழுதை கழிப்பது. போதாக்குறைக்கு அவர்கள் நகைகளை அபேஸ் செய்வது என்று இவர் அடிக்காத கூத்தே இல்லை எனலாம்.

காசும் காமமும் தலைக்கேறி, வேறு சில தில்லு முல்லுகளை இவர் செய்ய ஆரம்பித்தவேளை பொலிசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். தான் ஏமாற்றும் பெண்களின் அடையாள அட்டையை எடுத்து, அதில் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்தே மன்மதன் வசமாக மாடியதாக கூறப்படுகிறது. பொலிஸார், அவரை மஹர பிரதான நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆஜர்படுத்தினர். இதன்போது, அவரை நாளை 3ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வாகன வர்த்தகத்தில் ஈடுபடுவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள சந்தேகநபர், பல்வேறான விலாசங்களில் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹிமால் சஜீவ என்பவரிடமிருந்து, அடையாள அட்டைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

Comments