பாலத்தோப்பூர் : டெங்கு ஒழிப்பு வாரம்

.டெங்கு ஓழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் நேற்று (09) சிரமதான பணிகள் இடம் பெற்றது.

இதன் போது வடிகாண்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் டெங்கு பரவும் வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் துப்பரவு செய்யப்பட்டன.

இவ் சிரமதான பணியில் பாலத்தோப்பூர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நஹீர், சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.மஹரூப், கிராம சேவை அதிகாரி எஸ்.ஏ.சப்ரி, மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி,மூதூர் பிரதேச சபையின் சுகாதார தொழிலாளிகள், ஊர் மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.



Comments