அரிசிமலை விவகாரம் கிழக்கு மாகாண சபையால் கிழக்கு பொலிஸ் மா பிரதி அதிபருக்கு கடிதம்

இஹ்ஸானா- பரீத்


திருகோணமலை   புல்மோடடை அரிசிமாலை பிரதேசத்தில் கடந்த 12.08.2016 ம் திகதி புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்கு  பானா முற திலக  வன்ஸ வின் உதவியுடன் கொழும்பில் இருந்து புல்மோடடை அரிசிமலை பகுதியில் அமைந்துள்ள ஜகுபர் காலித்  என்பவரின் வீட்டிற்க்கு  விஜயம் மேற்கொண்டு தாக்கியமை தொடர்பாக 12.08.2016 புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றரை குறித்த அரிசிமலை பௌத்த பிக்குவிற்கு  எதிராக கொடுத்திருந்தார் .
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் கேள்வி எழுப்பிய உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர்
ஆனால் இற்றை வரைக்கும்  எந்த வித நடவடிக்கையும் இன்றி பொலிசாரும் இருப்பது  சட்டம் சரியாக இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுப்பினார்.

குறித்த பௌத்த பிக்குகள் மற்றும் காடையர்கள் அடங்கிய கூட்டம் சட்டவிரோதமாக செயற்பட்டுவிட்டு  புல்மோடடை முஸ்லிம்களை அரிசிமலை பௌத்த விகாரையை  தாக்கினார்கள் அதற்க்கு பின் புலமாக மாகாண சபை  உறுப்பினர்  அன்வர் இயங்கினார் என்று சிங்கள வலை தளங்களில்  போடப்பற்றிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் கூறியனார்.

குறித்த நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் இந்த சபையில் உள்ள சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் உண்மை நிலையை  அறிந்து கொள்ளவேண்டும்

Comments