பெட்ரோல் வளம் கொழிக்கும் எந்த முஸ்லிம் நாடும் பணக்கார நாட்டுகளின் பட்டியலில் இல்லை

உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும், பிரான்ஸ் 6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வது இடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக 7வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் இடம் ஆச்சர்யமாக உள்ளது. அங்கு 2.4 கோடி மக்கள் தான் வசிக்கின்றனர். கடந்த 5 வருடங்களில் சீனா பணக்கார நாடாக அதிவேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Comments