உயர்தர பரீட்சைக்காக பிறபகுதிகளில் இருந்து மாணவர்கள் தோற்றியமை குறித்து விசாரணைகள்…

நுவரெலியா பிரதேசத்தில் பாடசாலைகள் சிலவற்றில் உயர்தர பரீட்சைக்காக பிறபகுதிகளில் இருந்து  மாணவர்கள் தோற்றியமை குறித்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய,விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள்ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சகல தகவல்களையும் தமக்கு அறியத் தரும்படி மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்கவுக்கு ஆலோசனைவழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் சிலவற்றில், பிறபகுதிகளில் இருந்து வருகைத் தந்து உயர்தரப் பரீட்சையில் தோற்றியமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்னதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதுதொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டாம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமான முதல் தினத்திலேயே கம்பஹா – ஹேனகம மத்திய வித்தியாலயத்தில், வினாத்தாள்கள் தாமதித்து வழங்கப்பட்டமையால், குறித்த பரீட்சை மத்திய நிலைய தலைமைப் பொறுப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதேவேளை, பண்டாரவளை புனித ஜோசப் கல்லூரியின் உயர்தர பரீட்சை மண்டபத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் திடீரென மரணடைந்தார்.

இன்று காலை பரீட்சை மண்டபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென ஏற்பட்ட இருதயக் கோளாறினால் அவர் மரித்ததாக காவற்தறையினர் தெரிவித்து;ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் காரணமாக பரீட்சைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பிறிதொரு மத்திய நிலையத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments