போதைப் பொருளற்ற சமூகம்’ : பானந்துறையில் நடைபவணி

போதைப் பொருளற்ற சமூகம்’ எனும் தொணிப் பொருளில் போதைப் பொருள் எதிர்ப்பு நடைபவனி ஒன்றினை பானந்துறை தொட்டவத்தை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் அதன் அதிபர் எம்.எப்.எம். ஹஸ்ஷாலி தலைமையில் கடந்த புதன் கிழமை (3ஆம் திகதி) இடம் பெற்றது.

மேற்படி விழப்புணர்வுப் நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுடன், போதைப் பொருள் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் றிப்கா ஷாலிஹ், அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் பிரதிநிதிகள், அஹதியா பாடசாலைகளின் அதிபர்கள், அசிரியர்கள், பானந்துறை கெசல் வத்த பொலிஸ் அதிகாரிகள், பொது மருத்துவ சுகாதார அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபவனி பாடசாலையில் இருந்து அம்பலாண்டுவ, கிம்பத்த உள்ளிட்ட கிராமப் பகுதிகளினூடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்ததுடன் போதைப் பொருட்களின் ஆபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்டு வரும் சமுகச் சீர்கேடுகள் தொடர்பான விஷேட உரைகளும் இடம் பெற்றன.


Comments