மஹிந்த தரப்பு கூட்டு எதிர்க்கட்சியினரால் சுதந்திரக்கட்சியின் மாற்று மாநாட்டு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாட்டை புறக்கணிக்கும் மஹிந்த தரப்பு கூட்டு எதிர்க்கட்சியினர் மாற்று மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளனர்.


பிரதான மாநாட்டுக்கு இணைவாக இதனை நடத்தவுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

எனினும் இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அதனை புறக்கணிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச, வெளிநாட்டுக்கு செல்லவுள்ளார்.

முன்னதாக இத்தாலிக்கு செல்ல திட்டமிட்ட அவர் தற்போது மலேசியாவுக்கு செல்லவுள்ளார்.

Comments