முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசுகள் பூர்த்தி : நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும்

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் பல திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இச்­சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு கடந்த கால அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது சிபா­ரி­சு­களை விரைவில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­க­வுள்­ளது.

பல­தார மணம், முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, விவா­க­ரத்தின் போது பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) தாபரிப்புப் பணம் போன்ற விட­யங்கள் உட்­பட பல திருத்­தங்­களை குறிப்­பிட்ட குழு சிபா­ரிசு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12 லிருந்து 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பல­தார மணத்­திலும் சில கட்­டுப்­பா­டுகள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. விவா­க­ரத்­தின்­போது கணவர் மனை­விக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும் என்­பதும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

தாப­ரிப்பு தொடர்­பாக நிதி­ய­மொன்­றினை நிறு­வு­வ­தற்கும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த நிதியம் நீதி­ய­மைச்சின் கீழ் அமைய வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கென ஒரு குழுவும் நிய­மிக்­கப்­படும்.

அக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நீதி­ய­மைச்சின் செய­லாளர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உட்­பட ஐவர் உள்­ள­டங்­கி­யி­ருப்பர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபா­ரி­சு­களைச் செய்­வ­தற்கு கடந்த கால அர­சாங்­கத்­தினால் தற்­போது ஓய்­வு­பெற்­றி­ருக்கும் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் என்போர் அங்கம் பெற்­றுள்­ளனர். இக்­குழு பொது மக்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­னணி காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­களும் நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது என்­றாலும் உலமா சபை இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

குழுவின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் நீதியமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றதன் பின்பே சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Comments