Skip to main content
குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் புதிய தலைவராக மாவனல்லை பௌஸ் மௌலவி தெரிவு
- .
- குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் புதிய தலைவராக மாவனல்லை வலய குவாஸி நீதிபதி அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.எம்.பௌஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
- கொழும்பு மருதானையில் அண்மையில் நடைபெற்ற குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் பொதுக் கூட்டத்தின் போதே அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
- இதன் போது குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் உப தலைவர்களாக டாக்டர். ஐ.எம்.செரீப் மற்றும் எம்.வை.எம்.இப்ஹாம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச் செயலாளராக சட்டத்தரணி ஹஸைன் அஸ்ஹர் சைனூன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
- புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பௌஸ் உரையாற்றும் போது,
- முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை அமுல் நடத்தும் குவாஸி நீதிபதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் நலன்களைக் கவனிப்பதற்கும் ஸ்ரீலங்கா குவாஸி நீதிபதிகளின் மன்றம் மும்முரமாக செயற்படும்.
- குவாஸி நீதிபதிகள் அரசிடமிருந்து குறைவான கொடுப்பணவுகளைப் பெற்றுக் கொண்டு சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருகிறார்கள். இவர்களது கொடுப்பணவுகள் மற்றும் உரிமைகளுக்காக மன்றம் அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- -நஸீஹா ஹஸன்-

Comments
Post a Comment